அருந்ததி ராய் படம்; தேசிய விருது: அந்த மாதிரி காட்சியில் நடித்த ஷாருக்கான்!

Shah Rukh Khan | பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்த காட்சி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

Published on: September 10, 2024 at 11:49 am

Updated on: September 10, 2024 at 1:32 pm

Shah Rukh Khan | இந்தி சினிமாவை ஆளும் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானின் ஆரம்பம் மிக எளிமையானது. எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் அருந்ததி ராய் எழுதிய ‘இன் வீட் அன்னி கிவ்ஸ் இட் டோஸ் ஒன்ஸ்’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஷாருக்கான் இடம்பெறும் அதே பழைய வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது. இதில் ஷாருக்கான் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை கிளிப் மூலமாக அறிய முடிகிறது.

இது, படிப்பை விட இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கனவு காண விரும்பும் ஒரு இலட்சியவாத மாணவர் ஆனந்த் குரோவர் பற்றிய படமாகும். இந்தப் படத்தில் அருந்ததியும் கூட ஆனந்தின் காதலியான போஹேமியன் ராதா வேடத்தில் நடித்தார். இதில் ரோஷன் சேத், ரிதுராஜ் சிங் மற்றும் நான்கு முறை தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் 1989 இல் வெளிவந்தது. 1970 களின் பிற்பகுதியில் டெல்லியில் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு காட்சியைக் கொடுத்தது. இந்தப் படத்திற்கு ஒரு வருடம் முன்பு பிரபல தொலைக்காட்சித் தொடரான ​​‘ஃபௌஜி’ மூலம் ஷாருக்கான் தொலைக்காட்சிகளில் அறிமுகமானார். பின்னர் அவர் தொலைக்காட்சி தொடர்கள், ‘உமீத்’ மற்றும் ‘வாக்லே கி துனியா’ ஆகியவற்றில் சிறு வேடங்களில் தோன்றினார்.

இதையடுத்து, அஜீஸ் மிர்சாவின் ‘சர்க்கஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இன்று, ஷாருக்கான் உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. சொந்தமாக ஐ.பி.எல். அணியையும் அவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருந்ததி ராயின் இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கழுத்தில் நகை, புடவை, ‘நோ’ ஜாக்கெட்: பாரம்பரிய லுக்கில் ஆண்ட்ரியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com