Jailer 2: ஜெயிலர்-2 திரைப்படத்தில் ஷாருக் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Jailer 2: ஜெயிலர்-2 திரைப்படத்தில் ஷாருக் கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: April 7, 2026 at 1:02 pm
சென்னை, ஏப்.7, 2026: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அதிரடி திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாருக் கான், மோகன்லால், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
சமீபத்திய தகவலின்படி, மோகன்லால் தனது படப்பிடிப்பு பகுதிகளை முடித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதேசமயம், ஷாருக் கான் ஐந்து நாள்கள் தீவிரமான படப்பிடிப்பு அட்டவணையை ஒதுக்கியுள்ளார். அவர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அப்டேட்கள் ஜெயிலர் 2 படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளன.
ரஜினிகாந்த் பதில்
முன்னதாக, பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும், ‘ஜெயிலர் 2’ குறித்து ரஜினிகாந்த் ஒரு பெரிய அப்டேட் வழங்கினார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என் அப்பா போன்றவர்- தனுஷை எனக்கு பிடிக்கும்.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com