தவறான கோணத்தில் படம் பிடிப்பதா? “காந்தாரா” பட நடிகை சப்தமி ஆவேசம்!

Sapthami Gowda: “காந்தாரா” நடிகை சப்தமி கவுடா, பெண் நடிகைகளை தவறான கோணங்களில் படம்பிடிக்கும் புகைப்படக் கலைஞர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: March 9, 2026 at 12:40 pm

பெங்களூரு, மார்ச் 9, 2026: புகழ்பெற்ற “காந்தாரா” பாகம் 1 படத்தின் நடிகை சப்தமி கவுடா, பெண் நடிகைகளை தவறான கோணங்களில் படம்பிடிக்கும் புகைப்படக் கலைஞர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நடத்தை ‘மரியாதையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் சப்தமி கௌடா, “திரைப்படத் துறையில் பெண்களாகிய நாங்கள், மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு பிரச்சினையை ஒன்றிணைந்து எதிர்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதில், “பொதுக் கூட்டங்களில் பெண் நடிகைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் எடுக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. தேவையற்ற ‘ஜூம்’ மூலம் எங்கள் பணிகளை விட எங்கள் உடல்களை மையப்படுத்துகின்றன. சிலரால் மேற்கொள்ளப்படும் இந்த நடத்தை மரியாதையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சினமுற்ற குந்தவை.. மன்னிப்பு கோரிய சின்ன பழுவேட்டரையர்.. என்ன நடந்தது?

மேலும் அவர், “நாங்கள் எங்கள் கலைக்காக இங்கே இருக்கிறோம். எங்கள் சினிமாவுக்காக இங்கே இருக்கிறோம். திட்டமிட்ட ‘ஜூம்-கள்’ மற்றும் தவறான கோணங்களை நாங்கள் தெளிவாக கண்டிக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து, “அவை மரியாதைக்கான வெளிப்படையான மீறல்கள்; இவை சாதாரணமாக்கப்படவோ, சகித்துக்கொள்ளப்படவோ முடியாது. நிகழ்வுகளை செய்தி வெளியிடுபவர்கள் தொழில்முறைத் தன்மையையும், அடிப்படை மரியாதையையும், நாகரிகத்தையும் பேணுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறாரா கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com