Sana Khan: சினிமாவை விட்டு விலகியது குறித்து நடிகை சனா கான் ஓபனாக பேசியுள்ளார்.
Sana Khan: சினிமாவை விட்டு விலகியது குறித்து நடிகை சனா கான் ஓபனாக பேசியுள்ளார்.

Published on: January 22, 2026 at 5:49 pm
மும்பை, ஜன.22, 2026: முன்னாள் நடிகை சனா கான், தனது கணவர் தன்னை மூளைச் சலவை செய்து சினிமா உலகை விட்டு விலகச் செய்ததாக வந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும், அவர்கள் இருவரின் ‘மிக ரகசியமான’ திருமணம் குறித்து பேசியுள்ளார். நடிகை சனா கான் மற்றும் அவரது கணவர் முஃப்தி அனஸ் சையத், நடிகை ரஷ்மி தேசாய் நடத்தும் யூடியூப் சேனலில் விருந்தினர்களாக கலந்து கொண்டு, தங்களது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்டனர்.
அப்போது நடிகை சனா கான் இதனை தெரிவித்தார். முன்னதாக, 2019 ஆம் ஆண்டு, நடன அமைப்பாளர் மெல்வின் லூயிஸுடன் தனது உறவை சனா கான் பொதுவாக வெளிப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அவர் தன்னிடம் துரோகம் செய்ததால் அவருடன் பிரிந்ததாகக் கூறினார்.
இதையும் படிங்க: பிரபாஸின் மிகப்பெரிய தோல்வி படம்.. ஆதி புரூஷ் or தி ராஜா சாப்? எது தெரியுமா?
2020 மார்ச் மாதத்தில் பிங்க்வில்லா ஊடகத்திடம் பேசியபோது, சனா “இந்த மனிதர் வன்முறையாளன். நிச்சயமாக குடும்ப வன்முறை இருந்தது; அவர் என்னை அடித்தார். எனக்கு அடிபட்ட காயங்கள் உள்ளன, மேலும் அவர் மன்னிப்பு கேட்ட உரையாடல்களை நான் காட்ட முடியும்.”
மேலும், மெல்வின் மற்ற பெண்களையும் காயப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், 2020 அக்டோபர் மாதத்தில், சனா கான் தனது இன்ஸ்டாகிராமில், பாலிவுட்டை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, 2020 நவம்பர் மாதத்தில், அவர் அனஸை சூரத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் – சையத் தாரிக் ஜமீல் மற்றும் சையத் ஹசன் ஜமீல் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜனநாயகன் வெளியீடு எப்போது? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com