ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகை விருது

Rashmika Mandanna: தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிக்கைக்கான விருதுக்கு ராஷ்மிகா மந்தனா தேர்வாகியுள்ளார்.

Published on: March 9, 2026 at 3:05 pm

ஹைதராபாத், மார்ச் 09 2026: முன்னனி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் விஜய் தேவரகொண்டாவை மணந்தார். இவர்களது திருமணம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்த நிலையில் தற்போது நடிகை ராஸ்மிகா மந்தனா சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு துறையில் சிறப்பான சாதனை படைத்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தெலுங்கானா அரசு ‘கடார்’ விருது வழங்குகிறது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் சிறந்த நடிகைக்கான விருது ‘கேர்ள் பிரண்ட்’ படத்திற்காக ராஷ்மிகா மந்தனாவிற்கு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராஷ்மிகா இந்த படத்தின் பூமாதேவி கதாபாத்திரம் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றும் வாய்ப்பை வழங்கிய ராகுல் ரவீந்திரன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறந்த நடிகராக நாக சைதன்யா தண்டேல் திரைப்படத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் சிறந்த படம் என்ற விருதும் தண்டேல் திரைப்படத்திற்கு வழங்கப்பட உள்ளது. ரவிபுடி இயக்கிய “சங்கராந்திக்கி வஸ்துன்னம்” சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

இதையும் படிங்க: தவறான கோணத்தில் படம் பிடிப்பதா? “காந்தாரா” பட நடிகை சப்தமி ஆவேசம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com