Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா மந்தனா கட்டிப்பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா மந்தனா கட்டிப்பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Published on: January 1, 2026 at 5:23 pm
Updated on: January 1, 2026 at 5:35 pm
ஹைதராபாத், ஜன.1, 2026: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நீண்டகால காதலரும் நடிகருமான விஜய் தேவேரகொண்டா உடன் அவருக்கு 2025-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில், இருவரும் 2026-ஐ ஒன்றாக வரவேற்றுள்ளனர். இதற்கிடையில், பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள திருமணத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவை நடிகை ராஷ்மிகா மந்தனா கட்டியணைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனா
2025 ரஷ்மிகாவுக்கு தொழிலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. 2025-ல் ரஷ்மிகா மந்தானா ஐந்து படங்களில் நடித்திருந்தார். இதில், விக்கி கௌஷல் இணைந்து நடித்த “Chhaava” அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த ஹிந்தி படமாக அமைந்தது.
மேலும், “The Girlfriend” படத்தில், விஷமமான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்ததற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சிஸ்டர் மிட்நைட் OTT வெளியீடு.. எந்தத் தளம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com