Rani Mukerji Motherhood and Career: நடிகை ராணி முகர்ஜி, தனது மகள் அதிரா பிறந்த பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
Rani Mukerji Motherhood and Career: நடிகை ராணி முகர்ஜி, தனது மகள் அதிரா பிறந்த பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Published on: February 2, 2026 at 12:02 pm
புதுடெல்லி, பிப்.2, 2026: பாலிவுட் சினிமாவில் பாரிய புகழில் வலம் வந்த நடிகைகளில் ராணி முகர்ஜிக்கு முக்கிய இடமுண்டு. 90களின் காலகட்டங்களில் இவர் நடிப்பில் பல்வேறு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
இந்த நிலையில் தனது தனது கணவர், இயக்குநர் ஆதித்யா சோப்ரா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ராணி முகர்ஜி.
இது குறித்துப் பேசிய ராணி முகர்ஜி, “நீங்கள் வெறும் அம்மாவாக மட்டும் இருக்க முடியாது, உங்களுக்கு பிடித்த பணிக்கு மீண்டும் செல்லுங்கள்” என்றார். மேலும், “இது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. நான் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப காரணமாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராணி முகர்ஜி, “அதிராவுடன் இருக்கும் நேரம் மிகவும் புனிதமானது. ஆனால், என் கணவர் அவளிடம் ‘அம்மா பணிக்கு திரும்புவது முக்கியம்’ என்று பேசினார்.
அந்த ஆதரவு எனக்கு கிடைத்திருப்பது மிக அழகானது. ஒவ்வொரு பெண்களுக்கும், ஒவ்வொரு கணவருக்கும் இப்படியான ஆதரவு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்றார்.
இதையடுத்து, ““பெண்கள் தங்கள் விருப்பங்களை சாதிக்கப் போகிறார்கள். ஆனால், வாழ்க்கைப் பயணத்தில் துணை நிற்கும் கணவரின் ஆதரவு இருந்தால் அது இன்னும் இனிமையாகிறது. அது முழுமையான உணர்வை தருகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், பெண்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சமநிலைக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.
இதையும் படிங்க: பாலிவுட் டைரக்டர் வீடருகே துப்பாக்கிச் சூடு.. குவிந்த போலீசார்.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com