Rajinikanth: “துரந்தர் 2, ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்; துரந்தர் திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Rajinikanth: “துரந்தர் 2, ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்; துரந்தர் திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Published on: March 24, 2026 at 7:50 am
சென்னை மார்ச் 24 2026; பாலிவுட் இயக்குனர் ஆதித்ய தாரின் டைரக்ஷனில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு, மாதவனின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
துரந்தர் 2 ஏற்கனவே கே.ஜி.எப். அத்தியாயம் 2-இன் ஹிந்தி பதிப்பு (₹434 கோடி) வசூலை மிஞ்சியுள்ளது. மேலும், ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமான ‘2.0’-இன் வாழ்நாள் இந்திய வசூல் ₹404 கோடியையும் கடந்துள்ளது. இப்போது, சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்களான ‘கதார் 2’ (₹525 கோடி), ‘பதான்’ (₹543 கோடி), மற்றும் ‘ஆனிமல்’ (₹556 கோடி) ஆகியவற்றின் வசூலைத் தாண்டும் நோக்கில் பயணித்து வருகிறது.
ரஜினிகாந்த் வாழ்த்து
இந்த நிலையில் துறந்தர் திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த், ” ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்; ரன்வீர் சிங்கின் நடிப்பு பிரமாதம்- இயக்குனர் ஆதித்ய தார் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; சினிமாவில் 40 ஆண்டுகள்.. ராதிகாவை முத்தமிட்ட நயன்தாரா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com