47 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினி- கமல்.. யார் ஹீரோ.. அனிருத் பதில்

Anirudh Ravichander: ரஜினிகாந்த்- கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் படத்தில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: February 24, 2026 at 4:45 pm

சென்னை, பிப்.24, 2026: தமிழ் திரையுலகில் இருபெரும் நட்சத்திரங்களாக துருவங்களாக இருப்பவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 47 ஆண்டுகளுக்கு பின்னர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது.

இந்த நிலையில் படத்தில் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “இது மிகவும் ஸ்பெஷலான தருணம். இரண்டு ஜாம்பவான்களும் 47 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து வருகிறார்கள். அது என் வயதை விட அதிகம். நெல்சனுக்காக நான் மிகவும் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “புரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருவரும் ஜாலியான, பொழுதுபோக்கு கலந்த படத்தில் வருகிறார்கள். ஆனால் யார் ஹீரோ? என நீங்கள் இயக்குநரைதான் கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்.. ராதிகா பரபரப்பு பேச்சு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com