Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியது.

Published on: December 29, 2025 at 9:18 pm
சென்னை, டிச.29, 2025: டைரக்டர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தில் 1960ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் போஸ்ர் அண்மையில் வெளியானது. அதில் தமிழில் தமிழ் வாழ்க என்றும் தெலுங்கில் தெலுங்கு வாழ்க என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும், படம் தொடர்பாக வீடியோ காட்சி ஒன்றும் அண்மையில் வெளியாகியுள்ளது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : முதல் மரியாதை போன்ற படத்தில் ரஜினிகாந்த்.. சுதா கொங்காரா விபரீத ஆசை!
பராசக்தி படவிழா
இந்த நிலையில் பராசக்தி படத்தின் விழா ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எம்.பி ஆகியோர் பங்கேற்பார்கள் என்ற தகவல் காட்டுத்தீப் போல் பரவியது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மறுத்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த அவர், “பராசக்தி இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்கள் என பரவிவரும் தகவலில் உண்மை இல்லை.
அறிவித்தப்படி ஜனவரி 3ஆம் தேதி பட விழா நடத்த பணிகள் நடைபெற்று வருகின்றன”என்றார். பராசக்தி படம் பொங்கலுக்கு முன்னதாக திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஷாருக்கின் பதான், கல்கி 2898 AD பின்னால் வா.. சம்பவம் செய்த துரந்தர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com