Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா, தனது குழந்தை மால்தி பிறப்பதற்கு முன் கர்ப்ப காலங்களில் சந்தித்த கடினமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா, தனது குழந்தை மால்தி பிறப்பதற்கு முன் கர்ப்ப காலங்களில் சந்தித்த கடினமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

Published on: March 5, 2026 at 12:38 pm
Updated on: March 5, 2026 at 12:39 pm
மும்பை, மார்ச் 5, 2026: பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ், 2022-ஆம் ஆண்டு சரோகேசி மூலம் தங்கள் மகள் மால்தியை வரவேற்றனர். அதற்கு முன், பிரியங்கா சோப்ரா பல கடினமான கர்ப்ப அனுபவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘இன்னும் இடையறாத பயத்தில் இருக்கிறேன்’ எனவம் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனாஸை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2022-ஆம் ஆண்டு, அவர்கள் சரோகேசி மூலம் தங்கள் மகள் மால்தி மேரி சோப்ரா ஜோனாஸை வரவேற்று பெற்றோராக ஆனார்கள். இந்நிலையில், சமீபத்தில் மேரி கிளேர் இதழுக்கு அளித்த பேட்டியில், பிரியங்கா கர்ப்ப காலங்களில் சந்தித்த கடினமான அனுபவங்களைப் பற்றி பேசினார், மேலும் மால்தி பிறந்த பிறகு எல்லாம் எப்படி மாறியது என்பதை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: பெண் போலீசுடன் தகராறு.. பிரபல டைரக்டர் மகன் அதிரடி கைது!
அப்போது, பிரியங்கா சோப்ரா, மால்தி 110 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார். இது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, “எங்கள் மகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவள். ஏனெனில் நான் கர்ப்ப காலங்களில் மிகவும் கடினமான அனுபவங்களை சந்தித்தேன். அவள் என் அற்புதக் குழந்தை. அவள் பிறந்தபோது எல்லாம் சரியானது” என்றார்.
மேலும், “நான் இன்னும் இடையறாத பயத்தில் இருக்கிறேன். அவள் என் அருகில் இல்லாதபோது, பள்ளியில் இருந்தாலும், நான் வேறு நாட்டில் இருந்தாலும், நெருடல் தொற்றிக் கொள்ளும்” என்றார்.
மேலும், “இதயம் உடலுக்கு வெளியே ஓடிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” எனவும் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: துபாயில் ஐடி பணி.. நடிகர் மம்முட்டியின் மகன்.. துல்கர் சல்மானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com