இந்திய ரசிகர்கள் காட்டும் அன்பு.. பூரித்துப்போன பாகிஸ்தான் நடிகை..!

Pakistani actress Haniya Aamir: இந்திய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பால் பூரித்து போய் உள்ளார் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர்.

Published on: May 5, 2025 at 3:07 pm

Updated on: May 5, 2025 at 3:08 pm

சென்னை மே 5 2025: ஜம்மு காஷ்மீர் பகல்காமில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உள்ளூரு குதிரை ஓட்டி உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் தங்களது இன்னுயிரை இழந்தனர். இதில் புதிதாக திருமணமாகி ஹனிமூன் சென்ற ஜோடி ஒன்றும் அடங்கும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தை தொடர்ந்து, அந்நாட்டுக்கு எதிராக இந்தியா ராஜாங்க நடவடிக்கையில் இறங்கியது. முதல் கட்டமாக குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் உட்பட பல்வேறு நபர்களின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீரின் இன்ஸ்டாகிராம் கணக்கும் அடக்கம்.

இதையும் படிங்க: வங்கிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட ஏஞ்சலினா ஜோலி.. புதிய பட அப்டேட்.!

இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர் பேசியது போல் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக நாங்கள் பழிவாங்கப்பட்டுள்ளோம் என நடிகை ஹனியா ஆமீர் பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த தொடர்பாக விளக்கம் அளித்த ஹனியா அமீர், ” நான் அப்படி பேசவில்லை; நான் யாரையும் விமர்சிப்பவர் கிடையாது. மற்றவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நடிகை ஹனியா ஆமீர் தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில், ” தடை செய்யப்பட்ட எனது instagram கணக்கை வி பி என் மூலமாக சில ரசிகர்கள் பார்த்து தொடர்பு கொள்கிறார்கள். எனக்கு ஆறுதலாகவும் அவர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு ஆச்சரியம் தருகிறது. அதே நேரம் அரசின் கட்டுப்பாடுகளை நாம் மதிக்க வேண்டும்; என் மீது பிரியம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் கடன் பட்டுள்ளேன். நிலைமை மாறும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பாடகி இன்ஸ்டாகிராம் முடக்கம்; என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com