385வது சென்னை தினத்தை முன்னிட்டு, D2C காப்பீடு நிறுவனமான ஆக்கோ சென்னைக்காரன் என்ற பெயரிலான ஒரு புதிய இசை காணொலியை வெளியிட்டது. இந்தப் பாடலுக்காக தமிழ் ராப் பாடகர் அறிவு, கர்நாடக இசை உலகை சேர்ந்த சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் இணைந்துள்ளனர்.இந்த சென்னை இசைப்பாடல் வெளியீட்டு விழாவில் ஆக்கோவின் தலைமை சந்தையாக்கல் அதிகாரி ஆஷிஷ் மிஸ்ரா, “சென்னை ஆக்கோவுக்கு (ACKO) ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இங்கு 5 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்றுள்ளோம். சென்னையை தாக்கிய மிச்சாங் புயல் போன்ற சவாலான தருணங்களின்போது எங்களால் நேர்மறை உணர்வையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்.தொடர்ந்து, “சென்னை காரன் என்ற இசைப்பாடல் வழியாக சென்னையின் தனித்துவமான ஆன்மாவையும், உயிரோட்டமான உணர்வையும் நாங்கள் கொண்டாடுகிறோம்” என்றார். விழாவில் பாடகர் அறிவு, “இந்த இசை, வீடியோ பாடலுக்காக இந்த பிராண்டு தந்திருக்கும் படைப்பாக்க சுதந்திரம் உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. கர்நாடக இசை நிபுணரான சஞ்சய் அவர்களுடன் இணைந்து செயல்பட முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களை வளர்த்தெடுத்த இந்நகருக்கு எங்களது இசையின் வழியாக அன்பை வெளிப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றார். கர்நாடக பாடகர் சஞ்சய் சுப்ரமணியன், “தமிழ் ராப் கலைஞரான அறிவு அவர்களுடன் இணைந்து ஒத்துழைப்புடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். மெட்ராஸ் தினத்தன்று இப்பாடல் வெளிவருவது இதை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது” என்றார். வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz