Naga Chaitanya celebrates Sobitha: மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.
Naga Chaitanya celebrates Sobitha: மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.
Published on: October 9, 2025 at 3:43 pm
ஹைதரபாத், அக்.9, 2025: நடிகர் நாக சைதன்யா, ஜகபதி பாபுவின் ஜீ5 நிகழ்ச்சியான ஜெயம்மு நிச்சயமுராவில் சமீபத்திய விருந்தினராகக் கலந்து கொண்டார்.அப்போது, சோபிதா துலிபாலாவுடனான தனது உறவைப் பற்றி வெளிப்படையாகக் கூறினார்.
மேலும், அவர்களின் காதல் கதை மற்றும் பலவற்றைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் தண்டேல் படம் பற்றி நாகசைதன்யா பேசுகையில், “படத்தில் புஜ்ஜி தல்லி என்ற பாடல் இருந்ததால் சோபிதா வருத்தப்பட்டார்” என்றார். மேலும் அது அவரது செல்லப்பெயர் என்றார்.தொடர்ந்து, “அவள் மிகவும் கோபமாக இருந்ததால் சில நாட்கள் என்னிடம் பேசவில்லை.
படத்தில் அந்த சொற்றொடரை வைக்க இயக்குனரிடம் (சந்து மொண்டேட்டி) கேட்டேன் என்று அவள் நினைத்தாள், ஆனால் நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? என்றார்.மேலும், “தனது மனைவி சோபிதாவை மிகவும் நேசிப்பதாகவும், அவர் இல்லாமல் வாழ முடியாது” என்றும் நாக சைதன்யா கூறியுள்ளார்.
தண்டேல் படம் பற்றி.தண்டேல் படம், மீனவர்கள் தற்செயலாக பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.இந்தப் படத்தில், நாக சைதன்யா ஒரு கிராமிய மீன தோற்றத்தில், அந்த இனத்தின் தலைவனாக நடித்தார். இந்தப் படம் ரூ.100 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மிராய் ஒ.டி.டி வெளியீடு அறிவிப்பு.. எந்தத் தளம், எப்போது? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com