Mrunal Thakur: நடிகை மிருனால் தாக்கூர் தனது முன்னாள் காதலர் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
Mrunal Thakur: நடிகை மிருனால் தாக்கூர் தனது முன்னாள் காதலர் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.

Published on: February 23, 2026 at 8:40 pm
மும்பை, பிப்.23, 2026: வரவிருக்கும் இந்தித் திரைப்படமான டூ திவானே சீர் மெயின் (Do Deewane Seher Mein) திரைப்படத்தைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகை மிருணால் தாகூர் கலந்துகொண்டார். அப்போது, நடிகை மிருனால் தாக்கூர், தனது ஸ்காண்டினேவிய முன்னாள் காதலரைப் பற்றி ரௌணக் ராஜானியின் காமெடி நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.
அப்போது நடிகை மிருணால் தாகூர், “தான் ஹிருதிக் ரோஷனுடன் வேலை செய்வதைப் பற்றி முன்னாள் காதலர் பாதுகாப்பின்மையுடன் இருந்ததாக கூறினார். மேலும், அந்த அழுத்தத்தால் அவர் 15 கிலோ எடை இழந்ததாகவும் மிருனால் தாகூர் வெளிப்படுத்தினார். மேலும், இந்த அனுபவத்தை நகைச்சுவை நிகழ்ச்சியில் பகிர்ந்த நடிகை மிருனால், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களை திறந்த மனதுடன் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: இனி யாரையும்.. நாக சைதன்யா பிரிவு.. சமந்தா கடுமையான முடிவு!
முன்னதாக, நடிகை மிருனால் தாக்கூர், தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் ஹிருதிக் ரோஷன் (Super 30, 2019) மற்றும் ஷாஹித் கபூர் (Jersey, 2022) உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர், “என் முன்னாள் காதலர் (ஸ்காண்டினேவியர்) நான் அழகான நடிகர்களுடன் வேலை செய்கிறேன் என்று நினைத்து, உடற்பயிற்சி செய்து 15–17 கிலோ எடை குறைத்தார்.
பின்னர் சோர்வடைந்து மீண்டும் 20 கிலோ எடை அதிகரித்தார். ஆனால் நான் ஒருபோதும் அவரிடம் எடை குறைக்கச் சொல்லவில்லை. அது அவருடைய பாதுகாப்பின்மை” ஆகும் என்றார். மேலும், நடிகை மிருனால், தன்னிடம் சில நேரங்களில் பாதுகாப்பின்மை உணர்வு இருந்தாலும், நீண்ட தூர உறவுகள் தான் வேலைக்கு கவனம் செலுத்த சிறந்த வழி என்று நம்புவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: திரைப்பட துறையை விட்டு விலக தயார்.. தி கேரளா ஸ்டோரி இயக்குனர் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com