Mithun Chakraborty honoured Dadasaheb Phalke Award | மிருகயா (1976) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மிதுன் சக்ரவர்த்தி, “நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் மொழி இல்லை. என்னால் சிரிக்கவும் முடியாது, மகிழ்ச்சியில் அழவும் முடியாது. நான் கொல்கத்தாவில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். இதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை எனது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
நடிகர் மிருணாள் சென் இயக்கிய 1976 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற மிருகயா என்ற படத்தின் மூலமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 களில் அவர் நட்சத்திரமாக உயர்ந்தார். ஒரு தசாப்தத்தில் அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். “ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்” மற்றும் “ஜிம்மி ஜிம்மி” போன்ற பாடல்களில் அவரது நடன நிகழ்ச்சிகள் அவரை ‘டிஸ்கோ டான்சர்’ என்று பிரபலப்படுத்தியது நினைவு கூரத்தக்கது.
Aamir Khan: ஹாலிவுட் நடிகர் அமீர்கான் மீண்டும் காதல் வயப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன….
Selena Gomez new album: செலினா கோம்ஸ் தனது புதிய ஆல்பம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்….
பெண்கள் பார்க்க வேண்டிய 5 படங்கள் இங்குள்ளன….
Saif Ali Khan discharged: நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயங்களுக்கு லீலாவதி மருத்துவமனையில் 5 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் காரில் வீடு திரும்பினார். இவர்…
Saif Ali Khan Attacked | நடிகர் சைஃப் அலிகான் கத்திக் குத்து காயத்துக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்