Mithun Chakraborty honoured Dadasaheb Phalke Award | மிருகயா (1976) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மிதுன் சக்ரவர்த்தி, “நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் மொழி இல்லை. என்னால் சிரிக்கவும் முடியாது, மகிழ்ச்சியில் அழவும் முடியாது. நான் கொல்கத்தாவில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். இதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை எனது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
நடிகர் மிருணாள் சென் இயக்கிய 1976 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற மிருகயா என்ற படத்தின் மூலமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 களில் அவர் நட்சத்திரமாக உயர்ந்தார். ஒரு தசாப்தத்தில் அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். “ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்” மற்றும் “ஜிம்மி ஜிம்மி” போன்ற பாடல்களில் அவரது நடன நிகழ்ச்சிகள் அவரை ‘டிஸ்கோ டான்சர்’ என்று பிரபலப்படுத்தியது நினைவு கூரத்தக்கது.
Imran Khan: பாலிவுட் நடிகர் இம்ரான் கான், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது….
Imran Khan Citizenship Row: நடிகர் இம்ரான் கான் குடியுரிமை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாஜக தலைவர் கிரித் சோமையா….
Ramayana Release Update: ‘ராமாயணம்’ முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு செய்யப்பட உள்ளது; படத்தின் முன்பதிவு தசரா அன்று தொடங்குகிறது….
Nana Patekar Funeral: மறைந்த மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகரின் இறுதிச்சடங்கில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்காதது குறித்து மராத்தி திரைப்பட இயக்குநரும்…
Amitabh-Rekha Rumours: ரேகாவுடனான காதல் வதந்திகள் வெறும் கேலிக்கூத்து; அமிதாப் பச்சன் அளித்த பழைய விளக்கம் மீண்டும் வைரலாகி வருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்