Mana Shankara Vara Prasad Garu: நடிகர் சிரஞ்சீவியின், ‘மண சங்கர வர பிரசாத்’ என்ற திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
Mana Shankara Vara Prasad Garu: நடிகர் சிரஞ்சீவியின், ‘மண சங்கர வர பிரசாத்’ என்ற திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

Published on: January 18, 2026 at 1:14 pm
ஹைதராபாத், ஜனவரி 18, 2026;சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று வெளியான அனில் ரவிபுடி இயக்கிய குடும்ப நகைச்சுவை திரைப்படம் மண சங்கர வர பிரசாத் காரு (MSVPG), வெளியான ஆறு நாட்களிலேயே போட்டி படங்களை முந்தி சாதனை படைத்துள்ளது.
இந்த படம், சிரஞ்சீவியின் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக ஒரு வாரத்திற்குள் மாறியதோடு, அனைத்து பகுதிகளிலும் செலவுகளை மீட்டு லாப நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில்,திரைப்பட தயாரிப்பு நிறுவனம் Shine Screens ஞாயிற்றுக்கிழமை கூறுகையில்,சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த மண சங்கர வர பிரசாத் காரு (MSVPG) படம் உலகளவில் வெறும் 6 நாட்களில் ₹261 கோடி வசூல் செய்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “நாள் தோறும்… சாதனைக்கு சாதனை… #ManaShankaraVaraPrasadGaru பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கிறது. 6 நாட்களில் ₹261+ கோடி வசூல். விரைவில் ₹300 கோடி மைல்கல்லை எட்டுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்து, பிளாக்பஸ்டர் வார இறுதியை திரையரங்கில் அனுபவியுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Day by day…
— Shine Screens (@Shine_Screens) January 18, 2026
Record by record..#ManaShankaraVaraPrasadGaru is creating history at the box office ❤️🔥❤️🔥❤️🔥
A massive ₹261+ crore worldwide gross in just 6 days for #MegaSankranthiBlockbusterMSG 🔥
Racing towards the ₹300 crore milestone 💥💥💥
Book your tickets now and enjoy… pic.twitter.com/UNJIyDAXnq
சங்கராந்தி வெளியீடாக வந்த மண சங்கர வர பிரசாத் காரு (MSVPG), சிரஞ்சீவியின் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.
முன்னதாக இந்த சாதனை, 2019-ல் வெளியான செய் ரா நரசிம்மா ரெட்டி படத்துக்கே இருந்தது. அந்த படம் உலகளவில் ₹246.6 கோடி வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து, 2023-ல் வெளியான வால்டேர் வீரையா ₹219 கோடி வசூல் செய்தது.
2017-ல் சிரஞ்சீவியின் கம்பேக் படமான கைதி நம்பர் 150 ₹164 கோடி வசூல் செய்தது.
2022-ல் வெளியான காட்ஃபாதர் ₹107 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பிரபாஸின் தி ராஜா சாப் படுதோல்வி? ஒரு வார கலெக்ஷன் இவ்வளவுதானா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com