Mammoottys Rajamanikyam: “பெல்லரி ராஜா” என்ற கதாபாத்திரம் வழக்கமான “மாஸ் ஹீரோ” சாயலைத் தாண்டி, தமிழ் மசாலா பாணி கொண்டிருந்தது. இந்தப் படம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை முதலில் குறைவாக காணப்பட்டது.
Mammoottys Rajamanikyam: “பெல்லரி ராஜா” என்ற கதாபாத்திரம் வழக்கமான “மாஸ் ஹீரோ” சாயலைத் தாண்டி, தமிழ் மசாலா பாணி கொண்டிருந்தது. இந்தப் படம் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை முதலில் குறைவாக காணப்பட்டது.

Published on: February 25, 2026 at 3:11 pm
Updated on: February 25, 2026 at 3:12 pm
சென்னை, பிப்.25, 2026: மலையாள நடிகர் மம்முட்டி, AK லோகிததாஸ், பிளெஸ்சி, லால் ஜோஸ், அமல் நீரத், வைசாக், ஆஷிக் அபு, மார்டின் பிரக்கட், ஹனீஃப் அடேனி போன்ற பலரை அவர் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் ஆவார். இவர் ரிஸ்க் எடுத்த படமாக ராஜமாணிக்கம் பார்க்கப்படுகிறது. அன்வர் ரஷீத் இயக்கிய முதல் படமான இது முதலில், கேரள ரசிகர்களால் வெற்றிப் பெறும் என நம்பப்படவில்லை.
ஆரம்பத்தில், படம் தமிழ் மசாலா போல தோன்றியதால், மலையாள ரசிகர்கள் பெரும்பாலும் நம்பவில்லை. இந்த நிலையில், படம் தனது பட்ஜெட்டின் 10 மடங்கு வசூல் செய்தது. இதன் மூலம், மம்முட்டியின் படம் மோகன்லாலின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்தது. அதாவது, கதாபாத்திரம் வழக்கமான “மாஸ் ஹீரோ” சாயலைத் தாண்டி, வித்தியாசமான அணுகுமுறையுடன் வந்தது.
இதையும் படிங்க: மணிப்பூரி படத்துக்கு BAFTA விருது.. பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி!
மேலும், படத்தின் அழகியல் மற்றும் கதை சொல்லும் பாணி மலையாள சினிமாவில் வழக்கமானதல்ல. இந்த வெற்றி, மம்முட்டியின் துணிச்சலான தேர்வு மற்றும் புதிய முயற்சிகளை ஏற்கும் மனப்பாங்கு காரணமாக ஏற்பட்டது என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
படத்தின் கதை பின்னணி
இந்தப் படத்தில் பெல்லரி ராஜா தாயார் தனது இரண்டாவது திருமணத்தில், அவர் ஏற்கனவே ஒரு மகனைக் கொண்டிருப்பதை மறைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் ராஜா மனம் உடைந்து ஓடிப்போய் தனக்கென வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய், கடற்கொள்ளையராக மிரட்டும் பிரியங்கா சோப்ரா.. எப்படி இருக்கிறது தி பிளஃப்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com