Luxury Vehicle Smuggling Case: நடிகர்கள் பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகள் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
Luxury Vehicle Smuggling Case: நடிகர்கள் பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகள் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
Published on: September 23, 2025 at 4:26 pm
திருவனந்தபுரம், செப்.23, 2025: சொகுசு வாகன இறக்குமதி வழக்கில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் சோதனை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சட்டவிரோத சொகுசு வாகன இறக்குமதி வழக்கில், மலையாள திரைப்பட நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் வீடுகளில் சுங்க அதிகாரிகள் இன்று ரெய்டில் ஈடுபட்டனர்.
அதாவது பனம்பிள்ளி நகரில் துல்கர் சல்மான் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
ஆபரேஷன் நம்கூர் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, பூட்டானில் இருந்து உயர் ரக வாகனங்கள் கடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆரம்பத்தில் குறைந்த ஏல விலையில் வாங்கப்பட்டு, அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யப்பட்டது இதில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுருங்கச் சொல்வதென்றால் முன்னாள் பூட்டான் இராணுவ வாகனங்களை வாங்குவதும், பின்னர் வரிகளைத் தவிர்ப்பதற்காக போலி முகவரிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் பதிவு செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
மேலும் இதில் சில வாகனங்கள் இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் வணிக அதிபர்களின் வசம் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சோதனைகள் தொடரும்போது கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகின்றனர் என்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள முழு வலையமைப்பையும் சுங்கக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து.. அவர் கனவு என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com