கருடன் போன்று தரமான ஆக்ஷன்; உண்மை சம்பவ கதையில் லெஜெண்ட் சரவணன்!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகிவருகிறது.

Published on: September 18, 2024 at 9:31 am

Legend Saravanan | ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தில் அவருக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ஷாம், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி நடந்துவருகிறது.

தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய ‘கருடன்’ பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படம் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  பெயரை மாற்றிய நடிகை ஆலியா பட்: புதிய பெயர் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com