The Kerala Story 2: தி கேரளா ஸ்டோரி 2ஆம் பாகம் மீது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார்.
The Kerala Story 2: தி கேரளா ஸ்டோரி 2ஆம் பாகம் மீது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார்.

Published on: February 23, 2026 at 8:15 pm
திருவனந்தபுரம், பிப்.23, 2026: வரவிருக்கும் ஹிந்தி படமான தி கேரளா ஸ்டோரி 2 கட்டாய மதமாற்றங்களை சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இயக்குநர் காமக்யா நாராயண் சிங் இதற்குப் பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ இந்தப் படத்தில் தவறானது எதுவும் இருந்தால், நான் திரைப்படங்களை விட்டு விலகுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஆவணப்பட இயக்குநராக அறியப்படும் அவர், சமூக தீமைகள் குறித்து ஆழமான ஆராய்ச்சியுடன் படத்தை உருவாக்கியதாக கூறினார்.
தி கேரளா ஸ்டோரி பாகம் 2, மூன்று கேரளப் பெண்கள் கட்டாய மதமாற்றம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் கதையாகும். முன்னதாக, சர் மற்றும் டிரெய்லர் வெளிவந்தவுடன், பலர் அதை மிகைப்படுத்தப்பட்டது என்றும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் அதை பிரச்சார படம் எனவும் விமர்சித்தனர்.
குறிப்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், படத்தை மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டார். இந்த நிலையில் இயக்குனர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா, “நாங்கள் கேரளாவுக்கு எதிராக இல்லை. கேரளா கடவுளின் நாடு. அந்த மாநிலத்தில் உள்ள தீமையை விரைவில் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே சமூக மற்றும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் தனுஷ் ரசிகை.. அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்.. மிருணால் தாகூர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com