karakattakaran Movie: குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படமாக இன்றளவும் தமிழ் சினிமா எது தெரியுமா? இது ரஜினி விஜய் அஜித் நடித்த படம் அல்ல.
karakattakaran Movie: குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படமாக இன்றளவும் தமிழ் சினிமா எது தெரியுமா? இது ரஜினி விஜய் அஜித் நடித்த படம் அல்ல.
Published on: March 8, 2025 at 10:55 pm
தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்துள்ளனர். எனினும் அன்று முதல் என்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு நடிகர் ராமராஜன்.
இவர் கிராமத்து பின்னணியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்கள் எல்லாம் செம்ம ஹிட் அடித்துள்ளன.
அப்படி ராமராஜன் கனகா கூட்டணியில் அமைந்த ஓர் திரைப்படம் தான் கரகாட்டக்காரன். கரக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் ரம்யமான இசையில் இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இன்றளவும் கோவில் திருவிழாக்கள் தொடங்கி, திருமண விழாக்கள் வரை இந்த திரைப்படத்தின் பாடல்கள் கிராமப்புறங்களில் ஒலிப்பதை நாம் கேட்கலாம்.
அவ்வளவு தூரம் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணம் செந்தில் கவுண்டமணியின் நக்கல் நையாண்டி காமெடி.
அக்கால தலைமுறையினர் முதல் தற்போது உள்ள இளைஞர்கள் வரை இந்த படத்தின் காமெடியை மெய் மறந்து ரசிப்பார்கள் என்றால் அது மிகை அல்ல.
குறிப்பாக இந்த படத்தில் வரும் வாழைப்பழ காமெடி இன்றளவும் உயிர்ப்புடன் காட்சியளிக்கிறது.
உண்மையில் அந்த வாழைப்பழம் என்னதான் ஆனது? அது நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு தான் தெரியும்! இது ஒரு புறம் இருக்கட்டும். இந்தப் படத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?
அன்றைய காலகட்டத்தில் கரகாட்டக்காரன் திரைப்படம் ரூபாய் 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தியேட்டர்களில் கிட்டத்தட்ட 500 நாட்கள் வரை ஓடியது.
அந்த வகையில் அந்நாள்களிலேயே ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படம் ரூபாய் ஐந்து கோடி வசூலை குவித்துள்ளது. இன்றளவும் தமிழ் திரை உலகில் குறைந்தபட்ச முதலீட்டில் தயாரிக்கப்பட்டு அதிகபட்ச லாபம் கொடுத்த திரைப்படம் எது என்றால் அது கரகாட்டக்காரன் தான் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com