K Bhagyaraj: சினிமாவில் எப்படிப்பட்ட கதைகள் மக்களின் மனதை கவரும் தெரியுமா என மனம் திறந்து பேசி உள்ளார் திரைக்கதை மன்னன் என வர்ணிக்கப்பட்ட கே. பாக்யராஜ்.
K Bhagyaraj: சினிமாவில் எப்படிப்பட்ட கதைகள் மக்களின் மனதை கவரும் தெரியுமா என மனம் திறந்து பேசி உள்ளார் திரைக்கதை மன்னன் என வர்ணிக்கப்பட்ட கே. பாக்யராஜ்.
Published on: March 15, 2025 at 4:15 pm
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என வர்ணிக்கப்படுபவர் இயக்குனர் கே பாக்யராஜ். இவரின் திரைப்படங்கள் அனைத்தும், சற்று வித்தியாசமாகவே இருக்கும். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளான்கோவில் என்ற ஊரில் பிறந்தவர் தான் இந்த பாக்யராஜ். ஆரம்ப காலகட்டத்தில் கே. பாக்யராஜ் ஜி ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
பாரதிராஜா கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக உள்ள 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், டிக் டிக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்த நிலையில் 1979 ஆம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் கே பாக்யராஜ்.
இதையும் படிங்க நடிகர் சிரஞ்சீவிக்கு புதிய கவுரவம்.. இங்கிலாந்து வாழ்நாள் சாதனையாளர் விருது!
இதற்கிடையில் பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் கே பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு தமிழ்நாடு அரசு, சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான கே. பாக்கியராஜ் முந்தானை முடிச்சு, சின்ன வீடு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது வரை இவரின் திரைப்படங்கள் சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
டிராமா பட விழாவில் கே பாக்யராஜ்
இந்த நிலையில் ட்ராமா என்ற திரில்லர் படத்தின் பட நிகழ்ச்சியில் சென்னையில் கே. பாக்கியராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய கே பாக்கியராஜ், ” இந்தப் படக் குழுவினர் கதையை நம்பி திரைப்படம் எடுத்துள்ளனர். இந்த ஒன்று போதும் இவர்கள் மிகவும் சிறப்பாக வருவார்கள்.
என்னை பொறுத்தவரை சினிமாவில் பாதிப்புகள் இல்லை என்று கூற மாட்டேன்; அதே நேரம் கதையை பொருத்தமட்டில் நம் வாழ்க்கையை சுற்றி உள்ளது. எனது உதவியாளர்களிடமும் நான் இதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் நம் மனதை பாதித்த பல்வேறு விஷயங்கள் இருக்கும். இதுதான் கதைக்கரு. இதில் இருந்து தான் கதையை உருவாக்க வேண்டும் என்பேன்” என்றார்.
காதல் திரைப்படங்கள்
உலகெங்கிலும் காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என கே பாக்யராஜ் அந்த விழாவில் கூறினார். தொடர்ந்து பேசிய கே பாக்யராஜ், ” பொதுவாக அறிமுக இயக்குனர்கள் சினிமாவில் காதல் திரைப்படங்களை தான் முதலில் எடுப்பார்கள்; உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் காதல் திரைப்படத்தை ரசிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 6 வயது குழந்தையின் தாய்.. யார் இந்த கெளரி? அமீர் கானின் புதிய காதலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com