Chinna Thirai | கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆதிரா மர்ம தொடர் எப்படி இருக்கு?
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Chinna Thirai | கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆதிரா மர்ம தொடர் எப்படி இருக்கு?
Published on: September 12, 2024 at 5:23 pm
Chinna Thirai | கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மர்ம தொடர் ஆதிரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நீலவேணி என்ற பெண், ஜமீன் குடும்பத்தை பழிவாங்க ஆவியாக அலைவது பற்றிய கதை. அவள் வேங்கையூரில் உள்ள ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவள். கிளியனூர் ஜமீன் குடும்பத்தின் முழு பரம்பரையையும் அழிக்க சபதம் எடுத்திருக்கிறாள்.
அவள் தனது சபதத்தை ஆவிக்குரிய சிறுவனான சிட்டி பாபுவின் உதவியுடன் செய்ய நினைக்கிறாள். அவளது சபதம் நிறைவேறியதா என்பதே ஆதிரா தொடரின் மர்மமான திகில் கதை.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சினி டைம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை சி.ஜே.பாஸ்கர், பிஜு வர்கீஸ் ஆகியோர் இணைந்து இயக்க, ஸ்ரீ வாணி, ஜெய் தனுஷ், சாருதா, கண்மணி, சக்கரவர்த்தி, பூபதி, அஞ்சு அரவிந்த், பாலா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆர் நாயகியிடம் காதலை சொன்ன நடிகர்: மனம் திறந்த லதா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com