Actor Krishna: நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
Actor Krishna: நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

Published on: October 29, 2025 at 3:13 pm
சென்னை, அக்.29, 2025: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிருஷ்ணா. இவர், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா 2025 ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது போதைப் பொருள் வாங்குதல் மற்றும் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன.
இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி டி. பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் போதைப் பொருளை கடத்தி நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு விற்பனை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2025 ஜூலை மாதம் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தீவிர ரேஸிங் பயிற்சியில் அஜித் குமார்!
இதைத் தொடர்ந்து, ரோஜா கூட்டம் நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2025 ஜூலை 8ஆம் தேதி பிணை வழங்கியது. தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சம்மன்
இந்த வழக்கில் ஆஜராக கோரி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா இன்று (ஆக.29, 2025) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை சில மணி நேரங்கள் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஆஜரானா விவகாரம் கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த்? பரபரப்பு தகவல்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com