பிரபல பாடகிக்கு போன் போட்டு அழைத்த வைரமுத்து: கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Suchitra | Vairamuthu | பாடலாசிரியர் வைரமுத்து தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

Published on: September 16, 2024 at 12:13 am

Suchitra | Vairamuthu | தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. இவர் தமிழ் இலக்கியத்திலும் முக்கிய எழுத்தாளராக திகழ்கிறார். இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் கிட்டத்தட்ட 23 மொழிகளில் இதுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வைரமுத்துவின் கவிதைகள் தமிழக பாடநூலிலும் காணப்படுகின்றன. இவர் இதுவரை 7 தேசிய விருது பெற்றுள்ளார். மேலும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் என பல உயரிய விருதுகளை வென்றுள்ளார். எனினும் இவர் மீதும் திரைத்துறையில் உள்ள சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர்.
அதிலும் முதலாமானவர் பாடகி சின்மயி. ஆனால் தற்போது மற்றொரு பாடகி சுசித்ராவும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

பாடகி சுசித்ராவுக்கு போன் போட்ட வைரமுத்து உங்கள் குரல் அவ்வளவு அழகாக உள்ளது என பாராட்டியுள்ளார். மேலும் வீட்டுக்கு வந்தால் பரிசு தருகிறேன் எனக் கூறியுள்ளார். சுசித்ரா தனது பாட்டியை அழைத்துச் சென்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத வைரமுத்துக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது. மேலும் சுசித்ராவின் பாட்டியும், “நீங்கள் அவளுக்கு தந்தை மாதிரி. ஒவ்வொரு சிறிய குழந்தையையும் கைதூக்கி விட வேண்டும்” என பேசியுள்ளார்.

மேலும் பரிசு கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளீர்கள்.. பரிசு எங்கே எனக் கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத வைரமுத்து, விறுவிறுவென அறை ஒன்றுக்கு சென்று ஷாம்பு பாட்டில் ஒன்றை எடுத்து கொடுத்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது வைரலாகிவருகிறது. 71 வயதான வைரமுத்து, அனைத்து மாநிலங்களிலும் ஹேமா கமிட்டி அமைக்க வேண்டும் என நேற்றுதான் கூறி இருந்தார்.

கேரளத்தில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல்வேறு முக்கிய நடிகர்கள் மீதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீதும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐஸ்வர்யா- தனுஷ் விவகாரம்; ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும்வரை.. பயில்வான் ரங்கதான் சீக்ரெட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com