தி.மு.க. தேர்தல் அரசியலுக்காக உருவான இயக்கம் அல்ல.. நடிகர் சத்யராஜ்

Sathyaraj Hails DMK : தி.மு.க தேர்தல் அரசியலுக்காக உருவான இயக்கம் அல்ல; அது சமூக சேவைக்கான இயக்கம் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

Published on: July 20, 2026 at 1:49 pm

சென்னை, ஜூலை 20, 2026: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் டேலி (Tally), அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 250 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சத்யராஜ் சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சினிமா நடிகர் சத்யராஜ் தனது உரையில், திமுக தேர்தல் அரசியலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல, சமூக சேவைக்காக உருவான இயக்கம் என வலியுறுத்தினார். மக்களுக்கு சேவை செய்வதே தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் முக்கியம் என்றும், சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு கொண்டு வருவதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் நலனுக்காக பாடுபடுவதே இந்த இயக்கத்தின் அடிப்படை குறிக்கோள் என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். யார் ஆட்சி செய்தாலும் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களில் எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளார் என்றும், தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது என்றும் சத்யராஜ் கூறினார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களின் பெயரை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் திட்டங்களை மாற்றக் கூடாது என அவர் அறிவுறுத்தினார். மக்கள் நலனுக்கான திட்டங்களை தக்கவைத்துக் கொள்வதே நாட்டுக்கு நல்லது என்றும், திமுக வகுத்த பாதையில் செல்வதே தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதற்கு உறுதுணையாக இருப்பேன், ஆனால் ஆளுங்கட்சியாக இருந்தால் அட்டையாக ஒட்டிக் கொள்வதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், தமிழ்நாடு நன்றாக இருப்பதற்கும் திமுக இயக்கமே காரணம் என சத்யராஜ் குறிப்பிட்டார். “திமுக இயக்கம் தமிழ்நாட்டிற்கு எப்போதும் காவலனாக இருக்கும்” என அவர் உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க :  தேசிய விருது.. புறக்கணிக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ்..?

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யூடியூப் ஜோடியின் படம்! Mr Bhaarath

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யூடியூப் ஜோடியின் படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com