நடிகை திவ்யாவுக்கு டெல்லி தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியுள்ளன.
நடிகை திவ்யாவுக்கு டெல்லி தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியுள்ளன.
Published on: September 9, 2024 at 11:15 pm
Updated on: September 9, 2024 at 11:23 pm
Actress Divya Spandanas Wedding Rumours | பிரபல கன்னட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான திவ்யா ஸ்பந்தனாவின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த சமீபத்திய வதந்திகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
அந்தத் தகவலில், ரம்யா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபாவ் சவுத்ரியுடன் ஒரு தனியார் விழாவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை நடிகை திவ்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். இது ஆதாரமற்றது என்றனர். இருப்பினும், இந்த வதந்திகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ ரம்யாவோ அல்லது அவரது குழுவினரோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்த விழா நடைபெறுவதைத் தொடர்ந்து வரும் ஊகங்கள் அவரது ரசிகர்களிடையே பரவலான விவாதத்தைத் தூண்டிவிட்டன.
மேலும் திவ்யா திருமணம் குறித்து வரும் வதந்திகள் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இதேபோன்று செய்திகள் வந்துள்ளன. ரம்யா தமிழில் தனுஷ் உடன் பொல்லாதவன் படத்தில் நடித்து இருந்தார்.
இதையும் படிங்க ‘இது அவசர முடிவல்ல; தனியுரிமையை மதிக்க வேண்டும்’: மனைவி ஆர்த்தியை பிரிந்தார் ஜெயம் ரவி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com