‘சன்னி லியோனிடம் பேச முடியல; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்’: இயக்குனர் பேரரசு

Tamil Cinema | “பக்கத்தில் இருந்தும் சன்னி லியோனிடம் பேச முடியவில்லை; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்” என இயக்குனர் பேரரசு கலகலப்பாக பேசினார்.

Published on: September 19, 2024 at 10:57 pm

Updated on: September 19, 2024 at 11:54 pm

Tamil Cinema | ‘பேட்ட ராப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார். அப்போது சன்னி லியோன் குறித்து அவர் கலகலப்பாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ” சன்னி லியோனிடம் பேசுவதற்காகவாவது இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், பேரரசு, ” ஒரு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தி தெரியாது போடா என்று சொல்லுவார்கள்; இதைக் கேட்கும்போது சந்தோசமாக இருந்தது. நிறைய பேர் ஹிந்தி தெரியாது போடா என்று சொன்னார்கள்; அந்த வாசகங்கள் பொறித்த டீ சாட்டை அணிந்து இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது ஹிந்தி தெரியாமல் போனது கவலையாக போச்சு; பக்கத்துல சன்னி லியோன் உட்கார்ந்து இருக்காங்க. ஒரு ரெண்டு வார்த்தை கூட அவங்க கிட்ட ஹிந்தில பேச முடியல; இதுக்காகவாவது ஹிந்தி கத்துக்கணும்” என்றார்.

இதற்கிடையில், பட விழாவில் ஹிந்தி கத்துக்கணும் என இயக்குனர் பேரரசு பேசியதை சிலர் விமர்சித்து வருகின்றனர். இயக்குனர் பேரரசு அஜித்-ஐ வைத்து திருப்பதி, விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கணவருடன் லிப்-லாக்; மகனுடன் அமலா பால்: ஓணம் கொண்டாட்டம் வைரல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com