Bison Movie Update: நீ கதவுகளை அடைகிறாய்; நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன் என கவிதை தீட்டி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
Bison Movie Update: நீ கதவுகளை அடைகிறாய்; நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன் என கவிதை தீட்டி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
Published on: March 9, 2025 at 10:34 am
Updated on: March 9, 2025 at 1:33 pm
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களை முன் வைக்கும்.
பரியேறும் பெருமாள் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் மாரி செல்வராஜ் தனுசு உடன் கைகோர்த்தார். இந்தக் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் கர்ணன்.
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்த கர்ணனைத் தொடர்ந்து, தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் என்ற திரைக்காவியத்தை கொடுத்தார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார்கள்.
ரத்தினவேலு என்ற வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருந்த நடிகர் பகத் பாஸில் தனது தனித் திறமை வாய்ந்த நடிப்பால் முத்திரை பதித்திருப்பார். இந்தப் படத்தை தொடர்ந்து வாழை என்ற வெற்றி படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருப்பார்.
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்
— Mari Selvaraj (@mari_selvaraj) March 7, 2025
ஏன் வருகிறேன் என்றும்
உனக்கு தெரியும்
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய்
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். 🦬
—
பைசன் (காளமாடன்)#BisonKaalamaadan 🦬@applausesocial… pic.twitter.com/8ACSMdys4B
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரெஜிஸ் விஜயன் மற்றும் கலையரசன் என பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாரி செல்வராஜ் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் படம் குறித்த ஒரு பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், ” நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்குத் தெரியும்; ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும்..!
வந்து சேர்ந்தால் என்ன செய்வேன் என்று உனக்குத் தெரியும்.. ! ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய்.
நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைகிறேன்.. பைசன் (காளமாடன்)” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க குடும்பத்தோடு விரதம் இருந்தார் நயன்தாரா.. தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com