Lingusamy: தங்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
Lingusamy: தங்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

Published on: December 20, 2025 at 10:57 am
Updated on: December 20, 2025 at 11:03 am
சென்னை டிசம்பர் 20, 2025: சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமியின், திருப்பதி பிரதர்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூத்த மலையாள நடிகர் வீட்டில் சோகம்.. யார் இந்த ஸ்ரீனிவாசன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com