Dhurandhar 2: ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ உலகளாவிய வசூலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்போதுவரை ₹750 கோடி வசூலுடன் திகழ்கிறது.
Dhurandhar 2: ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ உலகளாவிய வசூலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்போதுவரை ₹750 கோடி வசூலுடன் திகழ்கிறது.

Published on: March 23, 2026 at 12:18 pm
மும்பை, மார்ச் 23, 2026: ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ உலகளாவிய வசூலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் கடந்த 4 நாள்களில் 750 கோடி வசூலித்துள்ளது. இது, இந்திய திரைப்படங்களின் வரலாற்றில் இரண்டாவது பெரிய ஓப்பனிங் வார இறுதி ஆகும். மேலும் இந்தப் படம் வசூலில், டைரக்டர் ராஜமௌலியின் பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் (RRR) ஆகியவற்றை முந்தியுள்ளது.
துரந்தர் 2 வசூல் சாதனை
ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அதற்கு முன் புதன்கிழமை நடைபெற்ற பிரமாண்டமான பிரீமியர் மூலம் சாதனை படைத்தது. இந்தப் படம் இந்தியாவில் ₹43 கோடி நெட் வசூல் செய்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் $2.5 மில்லியன் வசூல் செய்துள்ளது. இது இரண்டும் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், துரந்தர்-2 ஷாருக் கானின் ‘பதான்’ படத்தின் ₹287 கோடி சாதனையை முறியடித்துள்ளது.
புஷ்பாவை நெருங்கும் துரந்தர்
‘துரந்தர் 2’ படம், 2024-இல் வெளியான புஷ்பா 2-இன் ₹762 கோடி சாதனைக்கு அடுத்ததாக, ₹750 கோடி வசூலுடன் இந்திய திரைப்பட வரலாற்றில் இரண்டாவது பெரிய ஓப்பனிங் வார இறுதி சாதனையைப் பதிவு செய்துள்ளது. மேலும், பாகுபலி 2 (₹591 கோடி), கல்கி ஏ.டி. (ரூ.500 கோடி), ஆர்.ஆர்.ஆர் (ரூ.470 கோடி) உள்ளிட்ட படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இதையும் படிங்க: துரந்தர் படத்தை பார்க்காத தீபிகா படுகோன்.. என்ன காரணம்? ரசிகர்கள் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com