Coolie box office collection day 4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 4ம் நாளில் ரூ.400 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Coolie box office collection day 4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 4ம் நாளில் ரூ.400 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: August 18, 2025 at 9:51 pm
Updated on: August 18, 2025 at 10:23 pm
சென்னை, ஆக.18 2025: நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்தப் படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கிஇருந்தார்.
படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா, சத்யராஜ், சௌபின், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கூலி வசூல் நிலவரம்
#Comscore global estimates for #Coolie 's 1st extended weekend is out!
— Ramesh Bala (@rameshlaus) August 18, 2025
Debuts at No.4 in the world..
Gross estimates $45.34 Million [ 397 Crs] *
* – Actuals may be higher
This is All-time No.1 opening for a Kollywood movie 🔥 #SuperstarRajinikanth pic.twitter.com/3s5bjZg0hZ
ரஜினிகாந்தின் கூலி வியாழக்கிழமை (ஆக.14 2025) பாக்ஸ் ஆபிஸில் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு, வசூல் சீராக சரிந்து வருகிறது. எனினும் படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரூ.54.75 கோடி வசூலித்தது, இது 15 சதவீதம் சரிவைக் குறித்தது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை ரூ.39.5 கோடி வசூலித்தது, இது மேலும் 27 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, இந்தப் படம் ரூ.34 கோடி வசூலித்தது. இது மேலும் 13 சதவீதம் குறைவு ஆகும்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை, கூலி படத்தின் தமிழ் பதிப்பில் அதிகபட்சமாக ரூ.22.5 கோடி வசூலித்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கு பதிப்பு ரூ.6.5 கோடி வசூலித்தது. இந்தி பதிப்பு ரூ.4.65 கோடி வசூலித்தது. கன்னட பதிப்பு ரூ.35 லட்சமும் வசூலித்து இருந்தது.
மேலும், கூலி திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்தமாக 63.75% தமிழ் வசூலையும், 41.98% இந்தி வசூலையும், 49.53% தெலுங்கு வசூலையும் ஈட்டியது.
மேலும் உலகெங்கிலும் ரூ.400 கோடி வசூலை தாண்டியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வார்2 எப்படி?
ஆக.14ஆம் தேதி ஹிருத்திக்ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் படமான வார்2, ரூ.276.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com