Actress Parvathy Nair | நடிகை பார்வதி நாயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Actress Parvathy Nair | நடிகை பார்வதி நாயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Published on: September 21, 2024 at 12:24 pm
Updated on: September 21, 2024 at 1:19 pm
Actress Parvathy Nair | நடிகை பார்வதி நாயர் மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுபாஷ் என்பவரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகை பார்வதி நாயர் மட்டுமின்றி ராஜேஷ் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் மீது முன்னாள் ஊழியர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை பார்வதி நாயர் தமிழில் 2014ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘சன்னி லியோனிடம் பேச முடியல; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்’: இயக்குனர் பேரரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com