Malayalam actor Chako: கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
Malayalam actor Chako: கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
Published on: April 18, 2025 at 2:18 pm
Updated on: April 18, 2025 at 3:06 pm
கொச்சி, ஏப்.18 2025: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் பிரச்சனைகள் இன்னும் முடிவடையவில்லை. சக நடிகர் வின்சி அலோஷியஸ் ஏற்கனவே பாலியல் புகார் அளித்துள்ளார்.
இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, கொச்சி ஹோட்டலில் போதைப்பொருள் சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது கொச்சி ஹோட்டலில் இருந்து சாக்கோ தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை: பரபரப்பு புகார்!
இந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதற்காக நடிகருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கொச்சி நகர போலீசார் வியாழக்கிழமை (ஏப்.17 2025) தெரிவித்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சியில் புதன்கிழமை இரவு போலீசார் நடத்திய போதைப்பொருள் தடுப்பு சோதனையைக் கண்ட நடிகர் தனது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.
கொச்சியில் போதைப்பொருள் சோதனையின் போது ஹோட்டல் அறையிலிருந்து தப்பிச் செல்லும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிசிடிவியில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
— Dravidan Times (@DravidanTimes) April 18, 2025
#CCTVFootage #CCTVCamera #malayalamcinema #viralreelsシ pic.twitter.com/IFg6rfsoer
இதற்கிடையில், இந்த வீடியோ வியாழக்கிழமை வெளியானதாகக் கூறப்படுகிறது. கொச்சி நகர காவல்துறையின் கீழ் உள்ள மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை (DANSAF) இந்த சோதனையை நடத்தியது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “மூன்றாவது மாடியில் உள்ள தனது அறையிலிருந்து சாக்கோ தப்பிச் சென்றார்” என்றார். அதாவது, அதே மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து படிக்கட்டு வழியாக நடிகர் சாக்கோ தப்பிச் சென்றுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகர் ஸ்ரீக்கு மருத்துவ சிகிச்சை.. குடும்பத்தினர் பரபரப்பு அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com