Border 2 OTT release: பார்டர்-2 திரைப்படம் ஒ.டி.டி. ரிலீஸ்.. செக் பண்ணுங்க!

Border 2 OTT release: ரூ.400 கோடிகள் வரை வசூலித்த பார்டர் 2 திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

Published on: March 19, 2026 at 5:08 pm

மும்பை, மார்ச் 19, 2026: நடிகர் சன்னி தியோல், வருண் தவான், ஆஹன் ஷெட்டி மற்றும் தில்ஜித் தோசாஞ் நடிப்பில் வெளியான பார்டர் 2 திரைப்படம் தற்போது ஒ.டி.டி-யில் வெளியாக உள்ளது. ₹400 கோடி வசூல் செய்த இந்த வெற்றி படத்தை, ரசிகர்கள் விரைவில் தங்கள் வீடுகளில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

நெட்பிளிக்ஸ் தளம்

அந்த வகையில், இந்தப் படம் பிரபல ஒ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 20, 2026 அன்று வெளியாக உள்ளது. அனுராக் சிங் இயக்கத்தில், புஷன் குமார், நிதி துத்தா, JP துத்தா, கிரிஷன் குமார் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இந்தப் படம் 1997-இல் வெளியான பார்டர் படத்தின் தனித்துவமான தொடர்ச்சியாக பார்டர் 2 உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், இப்படத்தின் கதை 1971 இந்தியா–பாகிஸ்தான் போரின் பின்னணியில் அமைந்துள்ளது.

படத்தில் வருண் தவான் இந்திய ராணுவ வீரராகவும், ஆஹான் ஷெட்டி இந்திய கடற்படை வீரராகவும், தில்ஜித் தோசாஞ் இந்திய விமானப் படை வீரராகவும் வருகிறார். சன்னி தியோல் லெப்டினல் கர்னல் கதாபாத்திரல் வருகிறார். மேலும், இப்படத்தில் மோனா சிங், அன்யா சிங், மேதா ராணா, சோனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் உறவில் இருப்பதே சிறந்தது.. கேரள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com