மும்பை மாநகராட்சி தேர்தல்.. ஹேம மாலினி, நானா படேகர் வாக்களிப்பு

Hema Malini: மும்பை மாநகராட்சி தேர்தலில் திரை நட்சத்திரங்கள் நடிகை ஹேம மாலினி, நடிகர் நானா படேகர் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

Published on: January 15, 2026 at 2:12 pm

மும்பை, ஜன.15, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தின் 29 மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன.15, 2026) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள பல நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் பிரபலங்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். ஆரம்ப வாக்காளர்களில் ட்விங்கிள் கன்னா, அக்‌ஷய் குமார் மற்றும் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் அடங்குவர்.

மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, மொத்தம் 3.48 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் 15,908 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர்.
இவர்கள் 893 வார்டுகளில் 2,869 இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் 39,092 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 16, வெள்ளிக்கிழமை தொடங்கும். இந்தத் தேர்தலில் பிரபல நடிகர் நானா படேகர் மற்றும் நடிகை ஹேம மாலினி ஆகியோர் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளார்கள்.

இதையும் படிங்க: தி ராஜா சாப் 4ஆம் நாள் வசூல் இத்தனை கோடிகளா? முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com