Kalidas 2: பரத் நடித்துள்ள காளிதாஸ் பாகம் 2 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. 2019-இல் வெளியான காளிதாஸ் படத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியான இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் மீண்டும் இயக்குகிறார்.
Kalidas 2: பரத் நடித்துள்ள காளிதாஸ் பாகம் 2 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. 2019-இல் வெளியான காளிதாஸ் படத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியான இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் மீண்டும் இயக்குகிறார்.

Published on: March 15, 2026 at 5:07 pm
சென்னை மார்ச் 15, 2026;பரத் நடித்துள்ள காளிதாஸ் பாகம் 2 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறது. 2019-இல் வெளியான காளிதாஸ் படத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியான இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ செந்தில் மீண்டும் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் பரத் மற்றும் அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை என்ன?
முந்தைய படத்தைப் போலவே, தொடர்ச்சியான காளிதாஸ்- 2 ஒரு விசாரணைத் த்ரில்லர் ஆகும். இந்த படத்தை டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர், தங்களது ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர்.
இவர்கள் இதற்கு முன், தேசிய விருது பெற்ற பார்கிங் (2023), சூரி நடித்த கருடன் (2024), விஜய் சேதுபதி நடித்த மகாராஜா (2024) போன்ற படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கீதா மாதவன் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார். அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் கண் திறந்து பாரம்மா (2000) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க; கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீட விருது.. பெண்களின் குரலை முற்றிலும் புறக்கணிப்பதா? பாடகி சின்மயி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com