Rambo movie trailer : நடிகர் அருள் நிதியின் ரேம்போ படத்தின் டீசர் சன் நெக்ஸ்ட்டில் சனிக்கிழமை (அக்.4, 2025) வெளியாகிறது
Rambo movie trailer : நடிகர் அருள் நிதியின் ரேம்போ படத்தின் டீசர் சன் நெக்ஸ்ட்டில் சனிக்கிழமை (அக்.4, 2025) வெளியாகிறது
Published on: October 3, 2025 at 8:51 pm
சென்னை, அக்.03, 2025:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த அருள்நிதி, வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனான அருள்மிகு தமிழரசுவின் மகன் ஆவார். வம்சம் படத்தை தொடர்ந்து அருள்நிதி 2011 ஆம் ஆண்டு உதயன் என்ற படத்திலும், தொடர்ந்து மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவரது திரை உலக வாழ்க்கையில் அடுத்து வந்த டிமாண்டி காலனி என்ற திரைப்படம் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
புதிய படம்
இந்த நிலையில் தற்போது முத்தையாவின் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் அருள்நிதி ராம்போ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சன் நெக்ஸ்டில் நாளை அக்டோபர் நான்காம் தேதி வெளியாக உள்ள நிலையில் படம் அக்டோபர் 10ஆம் தேதி சன் நெக்ஸ்ட்டில் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க:வீட்டு பணிப்பெண்ணுக்கு கொடுமை.. பிரபல நடிகை, கணவர் மீது பாய்ந்தது வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com