AR Rahman: சாய்ரா பானு குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கடவுள் கூட மதிப்பாய்ப்பு செய்யப்படுவார் என்றார்.
AR Rahman: சாய்ரா பானு குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கடவுள் கூட மதிப்பாய்ப்பு செய்யப்படுவார் என்றார்.
Published on: April 24, 2025 at 5:25 pm
சென்னை, ஏப்.24 2025: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், யூடியூப்பில் நயன்தீப் ரக்ஷித்துடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். குறிப்பாக, தனது மனைவி சாய்ரா பானு உடனான பிரிவு குறித்தும் பேசினார். இந்த விஷயத்தில் இதுவரை ஏ.ஆர். ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது இது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “பொது வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு. இதனை அனைவரும் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள். பணக்காரர் முதல் கடவுள் வரை கூட மதிப்பாய்வு செய்யப்படுவார்கள். எனவே நான் யார்? என்றார். தொடர்ந்து, “நாம் ஒன்றாக இருந்து, கர்வமாகவோ அல்லது நச்சுத்தன்மையாகவோ இல்லாத வரை நம்மை விமர்சிப்பவர்களும் நமது குடும்பத்தான்” என்றார்.
இதையும் படிங்க : ‘ஆண்களால் கைவிடப்படும் பெண்கள்’: சமந்தா லைக் செய்த பதிவு வைரல்!
மேலும், “நான் ஒருவரின் குடும்பத்தைப் பற்றிச் சொன்னால், என்னுடைய குடும்பத்தைப் பற்றி வேறு யாராவது சொல்வார்கள். இந்தியர்களாகிய நாம் இதை நம்புகிறோம். யாரும் தேவையற்ற விஷயங்களைச் சொல்லக்கூடாது, ஏனென்றால் அனைவருக்கும் ஒரு சகோதரி, மனைவி, ஒரு தாய் இருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து, “உடைந்த இதயங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும். ஆனாலும், இந்த உடைவில், நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம், இருப்பினும் துண்டுகள் மீண்டும் அவற்றின் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
எங்கள் நண்பர்களே, இந்த பலவீனமான அத்தியாயத்தின் வழியாக நாங்கள் நடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்றார். ஏ.ஆர் ரஹ்மான், சாய்ரா பானு நவம்பர் 2024ல் பிரிந்தனர். இந்த நிலையில், 2025ல் ஏ.ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் தாம் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரியவில்லை என்றும் தனது ரஹ்மானில் உடல்நிலையில் அக்கறை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்.. இசையமைக்கிறார் ஏ.ஆர் ரகுமான்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com