Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தாம் இரண்டு ஆண்டுகாலம் மன உளைச்சலில் இருந்ததாகவும்; பயனற்ற உறவை கைவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தாம் இரண்டு ஆண்டுகாலம் மன உளைச்சலில் இருந்ததாகவும்; பயனற்ற உறவை கைவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Published on: August 13, 2026 at 1:06 pm
திருவனந்தபுரம், ஆக.13, 2026: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளாக ‘நார்சிசிஸ்டிக் துஷ்பிரயோகம்’ (narcissistic abuse) எனப்படும் மனரீதியான பாதிப்பை எதிர்கொண்டதாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “இறுதியில் அமைதியைக் கண்டடைய, பயனற்ற உறவுகளை கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவின் பின்னணியில் இருந்த உண்மைகளை அவர் ‘I AM with Dhanya Varma’ என்ற நேர்காணலில் விரிவாக விளக்கினார்.
அந்த உரையாடலில், தனது பதிவுக்குக் கிடைத்த எதிர்வினைகள் குறித்து அனுபமா கூறியதாவது, “இது ஒரே இரவில் உருவான பதிவு அல்ல; அதன் பின்னணியில் இரண்டு ஆண்டுகால வலி, உடல் மற்றும் மன ரீதியான சிதைவு இருந்தது. நான் முழுமையாகக் குணமடைந்து, தயாரானபோது தான் அதை பகிர்ந்தேன். இது ஒரு பெண்ணின் குணமடையும் பயணத்தின் வெளிப்பாடு.” என அவர் வலியுறுத்தினார்.
தான் எதிர்கொண்ட பாதிப்பை விவரித்தபோது, “நான் இரண்டு ஆண்டுகளாக நார்சிசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். இப்போது சில வகையான மக்களை வகைப்படுத்த முடிகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பார்த்த குடும்பத்தினர், இதுபற்றி தெரியாதவர்கள், பாலின அடிப்படையில் எதிர்மறையாகப் பார்ப்பவர்கள், இன்னும் அடையாளம் கண்டுகொள்ளாதவர்கள் என பல்வேறு வகைகள் உள்ளன” என்று அவர் கூறினார்.
அந்த உறவில் இருந்தபோது தான் ‘சுருங்கிப்போனதாக’ உணர்ந்ததாக அனுபமா பகிர்ந்துகொண்டார். “நான் மிகவும் எடை குறைந்தேன். மலர்ந்து செழிப்பதற்குப் பதிலாக தளர்ந்து சுருங்கிப்போனேன்” என்று அவர் தெரிவித்தார். அந்த நபரின் பெயரைச் சொல்ல மறுத்தாலும், தனது அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்ததன் மூலம், இதுபோன்ற சூழலில் இருக்கும் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ரசிகர் பக்கங்கள் என்ற பெயரில் ஆபாசம்.. கொதித்தெழுந்த ஸ்ரீதேவி மகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com