Urvashi Rautela: நடிகை குஷ்புக்கு கோவில் கட்டப்பட்டதாக வெளியான செய்திகள் நாம் அறிந்ததே. இந்தப் பட்டியலில் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் இடம் பிடித்துள்ளார். ஆனால்..,
Urvashi Rautela: நடிகை குஷ்புக்கு கோவில் கட்டப்பட்டதாக வெளியான செய்திகள் நாம் அறிந்ததே. இந்தப் பட்டியலில் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் இடம் பிடித்துள்ளார். ஆனால்..,
Published on: April 20, 2025 at 10:28 am
Updated on: April 20, 2025 at 10:32 am
டேராடூன், ஏப்.20 2025: தனக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர் என்ற கூற்றை அவசர அவசரமாக மறுக்கிறார் நடிகை ஊர்வதி ரவுதேலா. இது மீடியாக்களின் தந்திரம் எனவும் கூறுகிறார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தனது பெயரில் ஒரு கோயில் இருப்பதாக கூறியதற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளுக்கு நடிகை ஊர்வசி ரவுதேலா அறிக்கை வாயிலாக பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நோ்காணல் ஒன்றில் நடிகை ஊர்வசி ரவுதேலா இவ்வாறு கூறி இருந்தார். நடிகை ரவுதேலாவின் இந்தப் பேச்சு மிகப்பெரிய அளவில் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பபட்டது. இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் நடிகை இவ்வாறு பேசியுள்ளார் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், தமக்கு பேச்சு திரித்து பொருள் கூறப்பட்டது. தாம் அவ்வாறு கூறவில்லை, இதெல்லாம் மீடியாக்கள் பார்க்கும் வேலை என விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுதெலா.
இதையும் படிங்க வெளிநாட்டில் கார் பந்தயம்; விபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்.. சிறிய காயம் எனத் தகவல்!
நடிகை ஊர்வசி ரவுதேலா விளக்கம்
இந்தச் சர்ச்சை தொடர்பாக நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் இருந்து சனிக்கிழமை (ஏப்.19 2025) இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், “உத்தரகண்டில் என் பெயரில் ஒரு கோயில் உள்ளது; அது, ஊர்வசி ரவுடேலாவின் கோயில் அல்ல. இப்போது மக்கள் எதையும் சரியாகக் கேட்பதில்லை; ‘ஊர்வசி’ அல்லது ‘கோயில்’ என்று கேட்டாலே, மக்கள் ஊர்வசி ரவுதேலாவை வழிபடுகிறார்கள் என்று பேசுகிறார்கள். நான் பேசியதை சரியாக கேட்டு பதிலளியுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.
நடிகை ஊர்வசி ரவுதேலா என்ன பேசினார்?
இந்த வார தொடக்கத்தில், சித்தார்த் கண்ணனுடனான உரையாடலின் போது, உத்தரகண்டில் பத்ரிநாத் கோயிலுக்கு அடுத்ததாக தனக்கு ஒரு கோயில் இருப்பதாக நடிகை ஊர்வசி கூறினார். உத்தரகண்டில் என் பெயரில் ஒரு கோயில் உள்ளது. ஒருவர் பத்ரிநாத்துக்குச் சென்றால், அதற்கு அருகில் ஊர்வசி கோயிலுக்கும் செல்வார்கள். ஆசிர்வாதமும் பெறுவார்கள்” என சிரித்துக் கொண்டே பேசினார். இது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சச்சின்! ரீ ரிலீஸ்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com