சூர்ய வம்சம் உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை சத்ய பிரியா. இவர் அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளார். நடிகை சத்ய பிரியா தற்போது சன்டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவி தொடர் ஒன்றில் விசாலாட்சியாக தோன்றி பலரையும் கவர்ந்துவருகிறார். (கே.ஆர். விஜயா உடன் சத்ய பிரியா) சத்ய பிரியா முதலில் மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் அறிமுகமானார். இவருக்கு பைலட் பிரேம்நாத், கண்ணன் ஒரு கை குழந்தை, ராஜாவுக்கேத்த ராணி, பணக்காரன் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. (படத்தில் மகளுடன் சத்ய பிரியா) சத்ய பிரியா 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். 1976ல் பெசுகே என்ற கன்னட படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். மலையாளத்தை பொறுத்தமட்டில் 1978ல் சக்ராயுதம் என்ற படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். (டெல்லி கணேஷ் உடன் சத்ய பிரியா) சத்யப் பிரியா ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் பாலக் துருவ் ஆகும். இது, 1974ல் வெளியானது. சன்டிவி எதிர்நீச்சல் தொடரில் 2022 முதல் தற்போதுவரை விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். (கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி உடன் சத்ய பிரியா) ஆட்டோவில் ஜாலியான ஓர் சவாரி வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)