Actress Samantha: தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உடன் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Actress Samantha: தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உடன் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: April 17, 2025 at 5:21 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் என்ற அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்காக இவர் ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார். மேலும் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கும் சென்று வந்தார். சில காலங்கள் முகத்தை வெளியே காட்டாமல் முடங்கி கிடந்தார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து எல்லாம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா ஓப்பன் ஆக பேசி உள்ளார்.
அப்போது தாம் விளம்பர படங்களில் நடிக்க புகழ் பணம் கிடைக்கும் என்பதுதான் காரணம் என கூறினார். எனினும் அந்த பொருளின் தரம் குறித்து நான் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொண்டுதான் விளம்பரத்தில் நடித்தேன் என்றும் நடிகை சமந்தா கூறினார்.
மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 15 நிறுவன விளம்பரங்களை தாம் தவிர்த்தேன் என்றும் நடிகை சமந்தா கூறி இருந்தார். தொடர்ந்து அவர்கள் சொன்ன விளம்பரத்தில் நான் நடித்திருந்தால் எனக்கு கோடி கணக்கில் பணம் கிடைத்திருக்கும் என்றும் நடிகை சமந்தா கூறினார்.
இதற்கிடையில் தெலுங்கின் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2025ல் அதிக வசூல் செய்த தமிழ் படம்: குட் பேட் அக்லி 6ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com