Actress Samantha: துபாய் மற்றும் அபுதாபி பாலை வனங்களில் ஹாயாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
Actress Samantha: துபாய் மற்றும் அபுதாபி பாலை வனங்களில் ஹாயாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
Published on: June 7, 2025 at 10:13 am
Updated on: June 7, 2025 at 10:23 am
அபுதாபி, ஜூன் 7 2025: நடிகை சமந்தா சமீபத்தில் தனது தொழில்முறை பணிகளுக்காக துபாய் சென்றிருந்தார். அப்போது, சமந்தா தனக்கு கிடைத்த குறுகிய நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அபுதாபிக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார்.
அங்கு பரந்த மணல் மேடுகள் மற்றும் மரங்களுக்கு மத்தியில் ஹாயாக ஓய்வெடுத்தார். மேலும், மிகவும் புகழ்பெற்ற பாலைவன ரிசார்ட்டுகளில் ஒன்றான அனந்தரா கஸ்ர் அல் சரப்பில் தங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட படங்களை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இதற்கு பலரும் லைக் தெரிவித்து வருகின்றனர். அதாவது, அனந்தரா காஸ்ர் அல் சரபில் தங்கியிருந்தபோது எடுத்த தொடர்ச்சியான படங்களை சமந்தா பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், “இங்கே எல்லாம் அழகாக உள்ளது. சத்தம் இல்லை, அவசரம் இல்லை… இருக்க இடம் மட்டுமே. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பரந்த பாலைவனங்கள் மற்றும் பாரம்பரிய கோட்டை பாணி கட்டிடக்கலையால் சூழப்பட்டுள்ளது என்பதை படங்கள் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கதைகள் கேட்கும் அமலா பால்.. மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறாரா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com