Actress Radhika: வயதான தோற்றத்தில் ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தாய் கிழவி.
Actress Radhika: வயதான தோற்றத்தில் ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தாய் கிழவி.

Published on: February 24, 2026 at 4:12 pm
சென்னை, பிப்.24, 2026: தாய் கிழவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (பிப்.23, 2026) நடந்தது. இந்நிகழ்வில் நடிகை ராதிகா கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இது உண்மையில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம். அவர் இந்த வேஷம் போட்டு நடிக்கமாட்டார். எனவே அதை பெண் பாத்திரமாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள்” என்றார்.
நடிகை ராதிகாவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாய் கிழவி படத்தை அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியின் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் சிங்கம்புலி, அருள் தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள் உள்ளனர். இந்தப் படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க: யஷ் புதிய தோற்றத்தில் ‘Toxic’ டீசர்.. தாடி இல்லாமல் தோன்றிய நடிகர்.. அட செம்ம க்யூட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com