Actress Priya Varrier: நடிகர் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடனான கார் பயணத்தை மிஸ் செய்வதாகவும் பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
Actress Priya Varrier: நடிகர் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடனான கார் பயணத்தை மிஸ் செய்வதாகவும் பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
Published on: April 17, 2025 at 12:21 pm
சென்னை ஏப்ரல் 17 2025: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம், 2025 ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜித் குமாரின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்துள்ள இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூல் ஒரு வாரத்தில் ரூபாய் 200 கோடியை நெருங்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரியா வாரியர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அஜித்துடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விருப்பப்படுகிறேன் என்றார்.
தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் அன்பையும் மிஸ் செய்கிறேன் என்றார். இது குறித்து பேசிய நடிகை பிரியா வாரியர், ” அஜித்தின் அடுத்த படம் குறித்து தற்போது பேசுகிறார்கள்.
அந்தப் படத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நான் வெளிப்படையாகவே கேட்டுக்கொள்கிறேன். அஜித் சாரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அவரின் பிரியாணி மற்றும் கார் பயணத்தை நான் மிஸ் செய்கிறேன்” என்றார். மேலும் தமிழ் ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்புக்கு தான் கட்டுப்பட்டு இருப்பதாகவும் நடிகை பிரியா வாரியர் தெரிவித்தார்.
அப்போது, ” தமிழ் ரசிகர்களின் அன்பையும், பாசத்தையும் நான் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். நடிகை பிரியா வாரியர் மலையாளத்தில் வெளியான, ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலமாக பிரபலமடைந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க: 2025ல் அதிக வசூல் செய்த தமிழ் படம்: குட் பேட் அக்லி 6ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com