Tamil Cinema | நடிகை லதா தனது கடந்த காலத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Tamil Cinema | நடிகை லதா தனது கடந்த காலத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
Published on: September 12, 2024 at 4:06 pm
Updated on: September 12, 2024 at 4:07 pm
Tamil Cinema | 1980களில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை லதா. இவர் பள்ளி பருவத்திலே சினிமா துறையில் வந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது சினிமா துறையில் தாம் சந்தித்ததை நேர்காணலில் ஒன்றில் கூறியுள்ளார். அந்த நேர்காணலில், “நான் பள்ளி பருவத்திலே சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டேன். எனது முதல் படத்தில் எம்.ஜி.ஆர் உடன் நடித்தேன். என்னிடம் எம்.ஜி.ஆர் அன்பாக பழகுவார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி ஜானகி அம்மாளும் என்னிடம் அன்பாக பழகுவார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு பின்னர் 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால்தான் பிற நடிகர்கள் படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக ஜெய் சங்கர் படம் ஒன்றில் நடிக்க முடியவில்லை.
இதற்காக நான் வருத்தம் கொள்ளவில்லை. என்னிடம் மலையாள நடிகர் ஜெயன் காதலை சொன்னார். நான் அதைப் பற்றி பரிசீலிக்கும் முன்னரே அவர் விபத்தில் இறந்துவிட்டார்.
என் இளமைக்காலத்தில் ரஜினிகாந்த் உடன் கிசுகிசுக்கப்பட்டேன். ஆனால் ரஜினிகாந்த் நல்ல மனிதர். நான் சிறிய வயதில் ஜெயலலிதா உடன் நெருங்கி பழகினேன். அவரும் நானும் இணைந்து கிரிக்கெட் பார்க்க செல்வோம்” என்றார். இந்தப் பேட்டி தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸ் கில்லி: 5 நாளில் கோடிகளை அள்ளிய கோட்: வசூல் நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com