GOAT முதல் நாள் வசூலில் சதம் அடிப்பாரா விஜய்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

GOAT | நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: September 4, 2024 at 9:23 pm

Updated on: September 4, 2024 at 9:28 pm

GOAT | அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், அரசியலில் இருந்து விலக்கிக் கொண்டார். இந்த நிலையில் யாரும் பெரிதும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் அரசியலில் குதித்தார்.
அடுத்தடுத்து வேகமாக செயல்பட்ட விஜய் தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தொடர்ந்து, கட்சியின் கொடி, பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், விஜய் மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்ஷனில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட் – GOAT) என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்த பின்பு வெளியாகும் முதல் படம் இதுவாகும்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கோட் படத்துக்கு மிகப்பெரிய வசூலை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

அதன்படி முதல் நாள் வசூலே ரூ.100 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் விஜய்யின் கோட் படத்தின் சம்பளம் ரூ.200 கோடிக்கு மேல் என்ற தகவலும் வெளியானது.
விஜய்யின் கோட் படம் வெளியாகவுள்ள நிலையில், தீபாவளி அல்லது புத்தாண்டு போன்றவற்றுக்கு போட்டியாக செப்டம்பர் 5 ஒரு பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க இந்தப் படம் ஓடுமா? ரஜினிகாந்த் கணிப்பை பொய்யாக்கிய ஆர். சுந்தர்ராஜன் படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com